» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நவம்பர் முதல் மூன்று ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத இருக்கை வசதி பெட்டிகள்

திங்கள் 25, அக்டோபர் 2021 8:18:35 PM (IST)

நவம்பர் முதல் மூன்று ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத இருக்கை வசதி பெட்டிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்குரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு : சிறப்பு ரயில்களில்  இருக்கை வசதி பெட்டி களுக்கும் முன்பதிவு செய்வது அவசியமாக இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு நவம்பர் 1 முதல் வண்டி எண் 02628/02627 திருவனந்தபுரம் - திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 06850/06849 ராமேஸ்வரம் -  திருச்சி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்கள் ஆகியவற்றிலுள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் எடுத்து பயணம் செய்யும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல நவம்பர் 10 முதல் வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பகல் நேர சிறப்பு ரயில்களில் உள்ள நான்கு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகள் எடுத்து பயணம் செய்யலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory