» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என் குடும்பத்தினரே எனக்கு வாக்களிக்கவில்லையா? ஒரு ஓட்டு வாங்கிய பாஜக பிரமுகர் விளக்கம்

புதன் 13, அக்டோபர் 2021 5:23:04 PM (IST)எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எனக்கு வாக்களிக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் பரவி வருவதாக பாஜக பிரமுகர் கார்த்திக்  கூறியுள்ளார்.

கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருந்தது நேற்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. கார்த்திக் வீட்டிலேயே ஐந்து வாக்குகள் இருந்தும், அவருக்கு ஒரே ஒரு வாக்குதான் கிடைத்திருந்தது என்பது குறித்து, சமூக தளங்களில் பல்வேறு விதமான விமரிசனங்களும் எழுந்தன.

கோவை மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2 ஊராட்சித் தலைவர், 10 ஊராட்சிக வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் பெ.நா.பாளையம் வட்டாரம், குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. அவரது வீட்டில் 5 ஓட்டுகள் இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்திருந்தது.

குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டில் 1,551 வாக்களர்கள் உள்ளனர். இதில் தேர்தலில் 930 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் திமுக ஆதரவில் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். மேலும் சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 ஓட்டுகளும், அதிமுக பிரமுகர் வைத்திலிங்கம் 196 ஓட்டுகளும், சுயேச்சை வேட்பாளர் கந்தேஸ் 84 ஓட்டுகளும், தேமுதிக பிரமுகர் ரவிக்குமார் 2 ஓட்டுகளும், பாஜக பிரமுகர் கார்த்திக் 1 ஓட்டும் பெற்றிருந்தனர்.

இது குறித்து ட்விட்டர் பதிவிட்டிருந்த சமூக ஆர்வலர் மீனா கந்தசாமி, பாஜக வேட்பாளருக்கு உள்ளாட்சித் தேர்தலில் ஒரே ஒரு வாக்குக் கிடைத்திருக்கிறது. அவரது வீட்டிலிருக்கும் மற்ற 4 பேரும் வேறு ஒருவருக்கு வாக்களித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.  ர்த்திக்கின் பிரசார போஸ்டர்களையும் சிலர் ட்விட்டரில் பதிவிட்டு, இவ்வளவு போஸ்டர் அடித்தும் ஒரே ஒரு ஓட்டுதான் கிடைத்தது என்றும் விமரிசித்திருந்தனர்.

இது குறித்து அளித்த விளக்கம் அளித்துள்ள கார்த்திக் நான் இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவில்லை. சுயேச்சையாக கார் சின்னத்தில் போட்டியிட்டேன். எனது குடும்பத்தில் நான் மற்றும் 4 வாக்குகள் உள்ளன. ஆனால், அவை 4வது பஞ்சாயத்து வார்டில் உள்ளன. நான் போட்டியிட்டது 9வது வார்டில். எனக்கோ, என் குடும்பத்துக்கோ 9வது வார்டில் வாக்கு இல்லை. ஆனால், உண்மைக்கு மாறாக, நான் பாஜக சார்பில் போட்டியிட்டேன் என்றும், எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே எனக்கு வாக்களிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory