» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் அக்.16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

புதன் 13, அக்டோபர் 2021 4:57:08 PM (IST)

தமிழகத்தில் வரும் அக்.16ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், 

கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், செப். 14 மற்றும் 15 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை செப்.16 அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி செப். 16 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory