» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குடும்பத்திலேயே 5 ஓட்டுகள் இருந்தும் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்!

செவ்வாய் 12, அக்டோபர் 2021 3:40:46 PM (IST)

கோவையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் 1 ஓட்டு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.

கோவை மாவட்டத்தில் 1 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2 ஊராட்சித் தலைவர், 10 ஊராட்சிக வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் பெ.நா.பாளையம் வட்டாரம், குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினர் பதிவிக்கு போட்டியிட்ட பாஜக பிரமுகர் கார்த்திக்கிற்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. தனது ஓட்டு மட்டுமே கிடைத்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். 

அவரது குடும்பத்திலேயே 5 ஓட்டுகள் இருந்தும் அவருக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது அவருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குருடம்பாளையம் ஊராட்சி 9 ஆவது வார்டில் 1,551 வாக்களர்கள் உள்ளனர். இதில் தேர்தலில் 930 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் திமுக ஆதரவில் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். மேலும் சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 ஓட்டுகளும், அதிமுக பிரமுகர் வைத்திலிங்கம் 196 ஓட்டுகளும், சுயேச்சை வேட்பாளர் கந்தேஸ் 84 ஓட்டுகளும், தேமுதிக பிரமுகர் ரவிக்குமார் 2 ஓட்டுகளும், பாஜக பிரமுகர் கார்த்திக் 1 ஓட்டும் பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து

சாமிமே 21, 1634 - 12:30:00 AM | Posted IP 173.2*****

இந்தியா முழுவதும் வாக்கு சீட்டு முறை வைத்தால் பீ ஜெ பி கட்சிக்கு இது தான் நிலைமை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory