» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலூர் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு: 12பேருக்கு ஆயுள் - நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 24, செப்டம்பர் 2021 3:39:58 PM (IST)

கடலூர் ஆணவக்கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்குத் தண்டனையும் 12பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கடலூர் மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர். காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொடூரமாக கொன்றதுடன், சடலங்களை எரித்துள்ளனர். சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்த கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து இவ்வழக்கு 2004ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ தீவிர விசாரணை நடத்தி 15 பேரை குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். குற்றம்சாட்டப்பட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். 2 பேர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பிற்பகல் அறிவிக்கப்பட்டது. கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory