» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 3:10:51 PM (IST)

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த 9 மாவட்டங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி நாளையுடன் முடிவடைகிறது. 23-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 25-ந்தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், அ.தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் களம் காண்கின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய தேசிய லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுகிறது. விஜயகாந்தின் தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்தே களம் காண்கின்றன. இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.  இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory