» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி முகாம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சனி 18, செப்டம்பர் 2021 3:36:55 PM (IST)



டாஸ்மாக் அருகே தடுப்பூசி முகாம் அமைத்து, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை அம்மன்குளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இன்று (செப். 18) நடைபெற்றது. அதை தொடங்கிவைத்தபின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது: "பெண்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாம் மூலம் பரிசோதனை மட்டுமின்றி, சிகிச்சை தேவைப்பட்டால் பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் செய்யப்படும். 90 சதவீத பெண்களுக்கு நோய் தொடர்பான பரிசோதனை செய்துக்கொள்ளும் உணர்வு இல்லை.

அதன் அடிப்படையில், அவர்களுக்காக இதுபோன்ற முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடையே இன்னமும் கரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம், தயக்கம் உள்ளது. பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், டாஸ்மாக் செல்லும் ஆண்களுக்கு டாஸ்மாக்கில் மது அருந்த முடியாதோ என்ற அச்சம் உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி முகாம் அமைத்தால் விரைவாக தடுப்பூசிகளை செலுத்த முடியும்". இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory