» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமி: ராமதாஸ் விமர்சனம்

வியாழன் 16, செப்டம்பர் 2021 8:33:33 AM (IST)

சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா? என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 என இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிர்வாகிகள், 9  மாவட்டங்களுக்குரிய துணைப் பொதுச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எனது தலைமையில் செப்டம்பர் 14 இணைய வழியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர் 15, 16 தேதிகளில் விருப்ப மனு பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்;- கூட்டணி தர்மத்தை அதிமுக காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அதிமுகவில் சீட்டு கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் வெல்ல முடியுமா?

அதிமுகவுடன் தற்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது. சரியான தலைமை இல்லாததால் அதிமுக தொண்டர்கள் நமக்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் வென்று பாமகவின் வாக்கு சதவீதத்தை பலப்படுத்துவோம் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory