» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து செப்.30ல் முடிவு : அமைச்சர் அன்பில் மகேஷ்

புதன் 15, செப்டம்பர் 2021 3:49:54 PM (IST)

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதல்வரிடம் நாளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். அறிக்கையை பரிசீலித்த பின்னர் முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார். 

இந்நிலையில் இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளைத் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். சிலர் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் சிலர் 1 முதல் 8ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் கூறுகின்றனர். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் தொடங்க முதல்வருக்கு இன்று அறிக்கை அனுப்பப்பட உள்ளது.  

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து இம்மாத இறுதியில் முடிவு செய்யப்படும். செப்டம்பர் 30 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனையில் முடிவெடுக்கப்படும். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையிலே முடிவு செய்யப்படும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory