» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த் அறிவிப்பு

புதன் 15, செப்டம்பர் 2021 12:10:32 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாள்கள் காலை 10.00 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள். கட்டணத் தொகையாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - 4,000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் 2,000 செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory