» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கரோனா: தமிழக - கேரள எல்லைகளை மூட சீமான் வலியுறுததல்!

வெள்ளி 30, ஜூலை 2021 12:41:31 PM (IST)

தமிழக - கேரள எல்லைகளை உடனடியாக மூடி, கரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: கேரள மாநிலத்தில் கரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், புதிதாக 50க்கும் மேற்பட்டோருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

இதனால், கரோனா தொற்றின் மூன்றாவது அலை கேரளாவில் தொடங்கிவிட்டதாக மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கேரள - தமிழக எல்லையான பாறசாலைப் பகுதியில் கடந்த 9 ஆம் தேதி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் கேரள எல்லையோர மாவட்டங்களில் வாழும் தமிழக மக்கள் பெரும் பதற்றத்திற்கும், பாதுகாப்பின்மைக்கும் ஆளாகியுள்ளனர். கரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின்போது மிகத் தாமதமாக எல்லைகளை மூடியதால் மிகப்பெரிய அளவில் தொற்றுப்பரவல் அதிகரித்ததோடு, அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழக்கவும் முக்கியக் காரணமாக அமைந்தது. 

ஆகவே, அதனைப் படிப்பினையாகக் கொண்டு, கடந்த காலத்தைப்போல அலட்சியமாக இருந்திராமல், கரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் கேரள மாநிலத்துடனான அனைத்து எல்லைகளையும் உடனடியாக மூடி, கரோனா சோதனையை மேற்கொண்டு நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழைப் பெற்ற பின்னரே, யாவரையும் அனுமதிக்க முன்வர வேண்டுமெனவும், கொரோனோ தொற்றின் மூன்றாவது அலையிலிருந்து தமிழகம் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

TAMIL PEOPLE அவர்களுக்குJul 31, 2021 - 11:15:54 AM | Posted IP 108.1*****

கட்டுமரம் சொந்த ஊரு ஓங்கோல் என்ற ஆந்திர வில் உள்ளது , நாட்டை கொள்ளையடித்த கோடீஸ்வரர் குடும்பத்தையே அங்கே செட்டில் ஆக சொல்லவும்..

TAMIL PEOPLEJul 30, 2021 - 03:45:51 PM | Posted IP 108.1*****

தங்களுடைய சொந்த பூமி கேரளா தான், அங்கே போய் செட்டில் ஆகி விடுங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory