» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டங்கள் - அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

புதன் 21, ஜூலை 2021 5:03:59 PM (IST)

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை விளாங்குறிச்சியில் ரூ.114 கோடி மதிப்பில் புதியதாக சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் ரூ.114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, விரைவில் கட்டுமான பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கப்படும். இதன் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே நோக்கம். தென் மாவட்டங்களில் மிகக்குறைவாகவே தொழில் வாய்ப்பு உள்ளது, அதனால் அங்கு உள்ள படித்த இளைஞர்கள் வேலைக்காக சென்னை போன்ற பிற மாவட்டங்களை தேடி செல்ல கூடிய சூழல் உள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் கவனம் செலுத்தி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களை நோக்கி சென்று விட்டது. தற்போது புதியதாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Black Forest Cakes
Thoothukudi Business Directory