» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

செவ்வாய் 8, ஜூன் 2021 5:15:04 PM (IST)

திமுக நிர்வாகி  தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக இருப்பவர் தமிழன் பிரசன்னா. தி.மு.க.,வின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக இருக்கும்  இவர், பல்வேறு டிவி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி நதியா இன்று (ஜூன் 8) காலை சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்  பிரசன்னா - நதியா தம்பதிகளுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகி, 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி நதியாவின் பிறந்தநாளான இன்று, அதனை சிறப்பாக கொண்டாடி பேஸ்புக்கில் போட வேண்டும் என நதியா கூறியதாக தெரிகிறது. இதற்கு கணவர் பிரசன்னா, கொரோனா காலம் என்பதால் இவ்வாண்டு வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதனால் மனம் உடைந்த நதியா, காலை 10 மணியளவில் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து

திருட்டு திராவிடம்Jun 10, 2021 - 08:30:33 AM | Posted IP 108.1*****

திராவிடம் கட்சிதான் பல பெண்களை மணம்முடிப்பார்கள், வாழ்க பெரியார்

adaminJun 9, 2021 - 03:34:17 PM | Posted IP 108.1*****

rendaavathu manaiviyaa? news podra vanga olunga podunga.

JOSEPHJun 9, 2021 - 09:53:15 AM | Posted IP 162.1*****

இரண்டாவது பொண்டாட்டி கட்டிக்கிட்டு, முதல் மனைவிய கண்டுக்காம விட்டா அப்புறம் அவள் என்ன செய்வாள்? திமுககாரன்னா சும்மாவா?

தமிழ்ச்செல்வன்Jun 9, 2021 - 09:50:05 AM | Posted IP 162.1*****

தமிழன் பிரசன்னா இரண்டாவது மனைவியுடன் மண்ணடியில் வாழ்ந்து வந்த நிலையில் முதல் மனைவி தற்கொலை செய்தது குறித்து கொடுங்கையூர் காவல்துறை தீவிர விசாரணை

adaminJun 8, 2021 - 06:03:26 PM | Posted IP 46.16*****

intha mathiri mentalgala vechu kudumbam nadathurathu romba kastam. saagatum vidunga.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory