» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

புதன் 5, மே 2021 9:07:02 AM (IST)

சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். 

சென்னையில் மீன்பாடி வண்டி இயங்க தடை கேட்டும், சட்டவிரோத பேனர்களை அகற்ற கோரியும், மதுரை கிரானைட் முறைகேடு குறித்தும் ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்து வெற்றி கண்டவர் டிராபிக் ராமசாமி (87). சமூக ஆர்வலரான இவர் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விடாமுயற்சியுடன் பல போராட்டங்களை நடத்தி உள்ளார்.

கடந்த ஏப்ரல் 19-ந் தேதி உடல்நிலை மோசமானதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு டிராபிக் ராமசாமி உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Thalir Products


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory