» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி : நெல்லையில் சோகம்

செவ்வாய் 4, மே 2021 5:42:47 PM (IST)

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் சந்தனகுமார் (19). இவர் இன்று மாலை நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலின்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா், மற்றும் திருநெல்வேலி சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

தீயணைப்பு வீரா்கள் தீவிர தேடலுக்குப் பின்னா், சந்தனக்குமாா் இறந்த நிலையில் மீட்கப்பட்டாா். மேலும் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த சந்தனகுமார் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவரது சகோதரி சென்னையில் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். என்ஜினீயரான சந்தனகுமாரின் தந்தை வடமாநிலத்தில் வேலைபார்த்து வருகிறார். இன்று மதியம் குடும்பத்துடன் ஆற்றில் குளிக்க வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


மக்கள் கருத்து

adminமே 4, 2021 - 09:47:03 PM | Posted IP 46.16*****

90s kidkku pen kodukkalanaa ipdithaan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thoothukudi Business Directory