» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கங்கை கொண்டான் சரக்கு நிலையத்தில் முதன் முதலாக கோதுமை மூடைகள் கையாளப்பட்டன

செவ்வாய் 4, மே 2021 5:12:22 PM (IST)கங்கை கொண்டான் புதிய சரக்கு நிலையத்தில் முதன் முதலாக கோதுமை மூடைகள் கையாளப்பட்டன

திருநெல்வேலி ரயில் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு ரயில்வே சரக்கு நிலையம் (கூட்ஸ் ஷெட்) துவக்கப்பட்டது.  புதிதாக துவக்கப்பட்ட கங்கைகொண்டான் சரக்கு நிலையத்தில் இன்று (04.5.2021) முதன் முதலாக சரக்கு ரயிலிலிருந்து கோதுமை மூடைகள் இறக்கப்பட்டது. கங்கை கொண்டான் பகுதியில் உள்ள கோவில்பட்டி லட்சுமி மாவு மில்லுக்கு வடகிழக்கு ரயில்வே லக்னோ கோட்டம் கோண்டா கச்சாஹ்ரி என்ற ரயில் நிலையத்தில் இருந்து வந்த  1300 மெட்ரிக் டன் கோதுமை மூடைகள் முதன் முதலாக கையாளப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsNalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory