» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் ரத்து : தெற்கு ரயில்வே அறிவிப்பு

செவ்வாய் 4, மே 2021 4:14:57 PM (IST)

திருச்சி - திருவனந்தபுரம் இன்டர் சிட்டி சிறப்பு ரயில் மற்றும் நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர் சிட்டி சிறப்பு ரயில் மற்றும் நாகர்கோவில் - பெங்களூர் சிறப்பு ரயில் ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது‌.

1. தினந்தோறும் காலை 07.15 மணிக்கு புறப்படும் வண்டி எண் 02627 திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் வண்டி எண் 02628 திருவனந்தபுரம் - திருச்சி சிறப்பு ரயில் ஆகியவை மே 6 முதல் மே 15 வரை பத்து நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது

2. தினந்தோறும் பெங்களூரிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில் மே 5 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. அதே போல தினந்தோறும் நாகர்கோவிலிலிருந்து இரவு 07.10 மணிக்கு புறப்படும் வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் மே 6 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir ProductsThoothukudi Business Directory