» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை.. ஸ்டாலின் உத்தரவு!

செவ்வாய் 4, மே 2021 3:42:15 PM (IST)சென்னையில் அம்மா உணவகத்தில் புகுந்து பெயர் பலகையை அடித்து நொறுக்கி சூறையாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை சென்னை முகப்பேர் மேற்கு பத்தாவது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் புகுந்த திமுகவினர் சிலர் சூறையாடி உள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் இருக்ககூடாது என்று பெயர் பலகைகளை உடைத்து, உணவகத்தை சூறையாடி, அங்கிருந்தவர்களை மிரட்டி ஜெயலலிதா படத்தை கீழே போட்டு உடைத்தனர்

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் அதிமுகவினர், அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அத்துடன் அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பேனரை அதே இடத்தில் ஒட்டினர். அம்மா உணவகத்தின் பெயர் பலகை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுகவினர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.

இது தொடர்பாக திமுக எம்எம்ல்ஏ மா சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

adminமே 4, 2021 - 06:45:46 PM | Posted IP 108.1*****

amma unvakam nu irukkura pera arasu unavakam nu maathungada fools

tamilanமே 4, 2021 - 04:40:18 PM | Posted IP 162.1*****

aattam arambam.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory