» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்: பரமகுடியி்ல் பரபரப்பு

திங்கள் 3, மே 2021 5:35:04 PM (IST)

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணால் பரமகுடியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் பதவியேற்க உள்ளதாதல் அவர்கள் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்டாலின் முதல்வராக உள்ளதால் பெண் ஒருவர் நாக்கினை அறுத்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றி உள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவகுடியைச் சேர்ந்த கார்த்திக் மனைவி வனிதா (32). இவர் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வர் ஆனால் தனது நாக்கை அறுத்து உண்டியலில் போட்டுக் கொள்வதாக வேண்டியுள்ளார். அதன்படி இன்று காலை பரமக்குடி முத்தாலம்மன் கோவில் வாசலில் முன்பு தனது நாக்கினை கத்தியால் அறுத்து உண்டியலில் போட்டு விடுவதாக எண்ணி தனது நாக்கை அறுத்துக் கொண்டார். 

கோவில் திறக்காததால் நாக்கினை வாசல் படியில் வைத்துவிட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின் பொதுமக்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைத்தனர்.திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார்.இதையடுத்து அவர் முத்தாலம்மன் கோவிலில் தனது நாக்கை அறுத்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளார். தற்போது அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


மக்கள் கருத்து

மே 3, 2021 - 07:20:55 PM | Posted IP 162.1*****

முட்டாள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Nalam Pasumaiyagam




Black Forest Cakes




Thoothukudi Business Directory