» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரு இளைஞர்களை கொலை செய்தவர்களுக்கு கடும் தண்டனை : ரா.சரத்குமார் வலியுறுத்தல்

சனி 10, ஏப்ரல் 2021 5:41:02 PM (IST)

இரு இளைஞர்களை கருணையின்றி கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்  நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : அரக்கோணம் அருகே சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன், சூர்யா ஆகிய இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் அரசியல் காழ்ப்புணர்ச்சி, சாதி வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.

தமிழகத்தில் இத்தகைய மனிதாபிமானமற்ற தாக்குதல் அரங்கேறியது மிகுந்த வேதனையளிக்கிறது. சாதி, மத, இன, மொழி, பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையும், சமத்துவ சிந்தனையும் மக்களிடம் வேரூன்ற வேண்டுமென விரும்பும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது.

குற்றவாளிகளுக்கு விரைவாக நிறைவேற்றப்படும் தண்டனையின் வாயிலாக இனி தமிழகத்தில் இது போன்ற  சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir Products
Nalam PasumaiyagamThoothukudi Business Directory