» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது நடவடிக்கை

சனி 10, ஏப்ரல் 2021 8:45:58 AM (IST)

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் சுரண்டையில் உள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் 2019-ம் ஆண்டு பி.ஏ. 2-ம் ஆண்டு படித்தபோது, கல்லூரிக்கு தோழிகள் இருவரை மொபட்டில் அழைத்துச் சென்றேன். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சுரண்டை போலீஸ்காரர் முருகேசன் எனது செல்போன் நம்பரை வாங்கி எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரியிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஆவணங்களை வைத்துப் பார்க்கும்போது, போலீஸ்காரர் முருகேசன், கல்லூரி மாணவிக்கு குறுஞ்செய்தி, ஆபாச பாடல்கள் போன்றவற்றை அனுப்பிய குற்றச்சாட்டு நிரூபணமாகிறது. எனவே, அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீஸ்காரரின் பாலியல் தொந்தரவு குறித்து கல்லூரி மாணவி புகார் அளித்தபோதிலும் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி போலீஸ்காரருக்கு ஆதரவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். 

இது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையான ரூ.75 ஆயிரத்தை தமிழக அரசு பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஒரு மாதத்துக்குள் வழங்கிவிட்டு இன்ஸ்பெக்டர், போலீஸ்காரரிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம். மேலும், இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மீது ஒழுங்கு நடவடிக்கையும், போலீஸ்காரர் முருகேசன் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products


Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory