» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 10 பெண்கள் உட்பட 75பேர் போட்டி: சின்னம் ஒதுக்கீடு

செவ்வாய் 23, மார்ச் 2021 3:46:31 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் 10 பெண்கள் உட்பட 75 பேர் போட்டியிடுகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிடும்இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 3 பெண் வேட்பாளர்கள் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாசுதேவநல்லூர் (தனி தொகுதியில்) ஒரு பெண ;வேட்பாளர் உட்பட 11 வேட்பாளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 4 பெண் வேட்பாளர்கள் உட்பட 21 வேட்பாளர்களும், தென்காசி தொகுதியில் 18 வேட்பாளர்களும் (பெண் வேட்பாளர் இல்லை), ஆலங்குளம் தொகுதியில் 2 பெண் வேட்பாளர்கள் உட்பட 10 வேட்பாளர்களும், ஆக மொத்தம் தென்காசி மாவட்டத்தில் 10 பெண் வேட்பாளர்கள் உட்பட 75 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் ( தனி) ஆகிய  5 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் 75 வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் விபரம் வருமாறு:

தென்காசி தொகுதி

1. எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை.

2. எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்)- கை

3. எஸ்.முகம்மது (அ.ம.மு.க)- பிரஷர் குக்கர்

4. ஆர்.திருமலை முத்து (மக்கள் நீதி மய்யம்)- மின்கலவிளக்கு

5. ஆர்.வின்சென்ட் ராஜ் (நாம் தமிழர் கட்சி)

6. கே.எம்.உதயகுமார் (அண்ணா திராவிடர் கழகம்)- தொப்பி

7. எஸ்.சந்திரசேகர் (புதிய தமிழகம்)- தொலைக்காட்சி பெட்டி

8. எஸ்.சுரேஷ் குமார் (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)- பலாப்பழம்.

9. ஆர்.செல்வகுமார் (நாம் இந்தியர் கட்சி)- டிராக்டர் இயக்கும் உழவன்.

10. கே.முகுந்தன் (எனது இந்தியா கட்சி)- கண்காணிப்பு காமிரா.

11. எம்.ஜெகநாதன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- கண்ணாடி தம்ளர்.

12. ஜெ.ஆரோக்கிய பிரபு (சுயேச்சை)- ஆட்டோ ரிக்க்ஷா.

13. எஸ்.கருப்பசாமி (சுயே)- வாளி.

14. ஏ.பழனிகுமார் (சுயே)- கைப்பெட்டி.

15. பி.பழனிமுருகன் (சுயே)- கப்பல்.

16. ஏ.மாடசாமி (சுயே)- பட்டாணி.

17. ஆர்.ரமேஷ் (சுயே)- உழவு கருவி.

18. எம்.ரீகன்குமார் (சுயே)- தீப்பெட்டி.

ஆலங்குளம் தொகுதி

1. மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை.

2. பூங்கோதை (தி.மு.க.)- உதய சூரியன்.

3. ராஜேந்திரநாதன் (தே.மு.தி.க.)- முரசு.

4. செல்வகுமார் (மக்கள் நீதி மய்யம்)- மின்கல விளக்கு.

5. உதயகுமார் (புதிய தமிழகம்)- தொலைக்காட்சி பெட்டி.

6. சங்கீதா இஷாக் (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி.

7. ஏ.ஹரி நாடார் (சுயே)- தலைக்கவசம்.

8. கே.சிவராம் (சுயே)- கப்பல்.

9. கே.அருண்குமார் (சுயே)- ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவில் முனை.

10. எஸ்.சங்கர் கணேஷ் யாதவ் (சுயே)- புல்லாங்குழல்.

கடையநல்லூர் தொகுதி

1.சி. கிருஷ்ணமுரளி (அ.தி.மு.க.)- இரட்டை இலை.

2. கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)- ஏணி.

3. எஸ்.அய்யாத்துரை பாண்டியன் (அ.ம.மு.க)- பிரஷர் குக்கர்.

4. எம்.அம்பிகா தேவி (மக்கள் நீதி மய்யம்)- மின்கல விளக்கு.

5. எம்.முத்துலட்சுமி (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி.

6. எஸ்.ராஜாராம் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)- பானை.

7. எம்.அய்யாத்துரை (சுயே)- நூடுல்ஸ் கோப்பை
.
8. ஆர்.அய்யாத்துரை (சுயே)- வாணலி.

9. கே.ஆவணி ராஜா (சுயே)- இரட்டை தொலை நோக்காடி.

10. கே.ராதாகிருஷ்ணன் (சுயே)- பணப்பை.

11. ஆர்.ராஜா பொன்னுச்சாமி (சுயே)- கணினி.

12. ஏ.கணேசன் (சுயே)- கடிதப்பெட்டி.

13. ஏ.சங்கர் (சுயே)- பெட்டி.

14. ஆர்.சிவசுப்பிரமணியன் (சுயே)- வாயு சிலிண்டர்.

15. ஆர்.பூலோகராஜ் (சுயே)- சாலை உருளை.

16. கே.மாரி துரைப்பாண்டியன் (சுயே)- கன சதுரம்.

17. எஸ்.முருகானந்தம் (சுயே)- விளக்கேற்றி.

18. பி.ராஜூ (சுயே)- தள்ளுவண்டி.

19. கே.வேலம்மாள் (சுயே)- புல்லாங்குழல்.

20. ஆர்.கிருஷ்ணன் (சுயே)- கட்டில்.

21. எஸ்.சீனிவாசன் (சுயே)- தொலைக்காட்சி பெட்டி.

வாசுதேவநல்லூர் (தனி)தொகுதி

1. ஏ.மனோகரன் (அ.தி.மு.க.)- இரட்டை இலை.

2. தி.சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.)- உதயசூரியன்.

3. எஸ்.தங்கராஜ் (அ.ம.மு.க)- பிரஷர் குக்கர்.

4. சி.எஸ்.மதிவாணன் (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி.

5. வி.பேச்சியம்மாள் (புதிய தமிழகம்)- தொலைக்காட்சி பெட்டி.

6. எம்.ஈஸ்வரன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)- பானை.

7. எம்.சின்னசாமி (மக்கள் நீதி மய்யம்)- மின்கல விளக்கு.

8. கே.கருப்பசாமி (எனது இந்தியா கட்சி)- கண்காணிப்பு காமிரா

9. பி.ஜெயக்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)- மோதிரம்.

10. கே.முத்துப்பாண்டி (சுயே)- மடிக்கணினி.

11. பி.ராமமூர்த்தி (சுயே)- கரும்பலகை.

சங்கரன்கோவில்(தனி)தொகுதி

1. வி.எம்.ராஜலெட்சுமி (அ.தி.மு.க.)- இரட்டை இலை.

2. ஈ.ராஜா (தி.மு.க.)- உதய சூரியன்.

3. ஆர்.அண்ணாதுரை (அ.ம.மு.க.)- பிரஷர் குக்கர்.

4. கே.பிரபு (மக்கள் நீதி மய்யம்)- மின்கல விளக்கு

5. பி.மகேந்திரகுமாரி (நாம் தமிழர் கட்சி)- கரும்பு விவசாயி.

6. வி.சுப்பிரமணியன் (புதிய தமிழகம்)- தொலைக்காட்சி பெட்டி.

7. உ.பன்னீர்செல்வம் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி)- தீப்பெட்டி.

8. எம்.பாலமுருகன் (பகுஜன் திராவிட கட்சி)- வாளி.

9. கே.மதன்குமார் (எனது இந்தியா கட்சி)- கண்காணிப்பு காமிரா.

10. ஏ.கணேசன் (சுயே)- மின்கம்பம்.

11. ஆர்.கருத்தப்பாண்டியன் (சுயே)- சீர்வளி சாதனம்.

12. பி.குருராஜ் (சுயே)- வைரம்.

13. எஸ்.முத்துக்குட்டி (சுயே)- ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவில் முனை.

14. எம்.வள்ளியம்மாள் (சுயே) – ஊதல்

15. ஏ.வெற்றிமாறன் (சுயே) – வாயு சிலிண்டர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam



Thalir Products




Black Forest Cakes



Thoothukudi Business Directory