» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

என் வாகனத்தில் சோதனை செய்தால் நேர்மையும், வியர்வையும் தான் கிடைக்கும்- கமல்ஹாசன் பேச்சு

செவ்வாய் 23, மார்ச் 2021 12:43:07 PM (IST)என் வாகனத்தில் சோதனை செய்தால் நேர்மையும், வியர்வையும் தான் கிடைக்கும். அதை தவிர வேறெதுவும் கிடைக்காது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து திருச்சியில் நேற்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் திருச்சி மேலக்கல்கண்டார்கோட்டை பஞ்சாயத்துபோர்டு அலுவலகம் அருகே வாக்குகள் கேட்டு பேசினார். பின்னர் திருவெறும்பூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: காமராஜர் எனது தந்தை, எம்.ஜி.ஆர்  எனது சொத்து. அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், நான் வரும் வழியில் ”ஜெயிச்சாசு” ”ஜெயிச்சாசு” என்ற குரல் கேட்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றினால் தான் வெற்றி.

நான் 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறேன். எந்த ஊருக்கு சென்றாலும், திறந்து கிடக்கிற சாக்கடை, போக்குவரத்து நெரிசல் இருக்கத்தான் செய்கிறது. இங்கு அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைமேட்டால் உங்களுக்கு என்ன பெருமை இருக்க போகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். எங்கள் வேட்பாளர்களுக்கு அரசியல் பயிற்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையில் அனுபவம் இருக்கிறது. தமிழகத்தை ஆளுகிற இரு கட்சிகளுக்கும் ஊழலை தவிர வேறெதுவும் தெரியாது.

எடப்பாடி பழனிசாமியை பார்த்து அவர் ரூ.10 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் அவரோ, ஸ்டாலினை பார்த்து, இவர் ரூ.20 லட்சம் கோடி சுருட்டிவிட்டார் என்கிறார். அது இல்லை என்று இருவருமே சொல்லவில்லை. இப்போது நாம் கணக்கு போடுவது என்னவென்றால், நம்முடைய பணம் ரூ.30 லட்சம் கோடியை இவர்கள் இருவரும் அடித்துவிட்டார்கள் என்பது தான். ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி அவர்களே வேட்டு வைத்து கொள்கிறார்கள்.

நான் பிரசாரத்துக்கு சென்ற வாகனத்தை சோதனை செய்தார்கள். என் வாகனத்தில் சோதனை செய்தால் நேர்மையும், வியர்வையும் தான் கிடைக்கும். அதை தவிர வேறெதுவும் கிடைக்காது. எங்கள் ஆட்சியின் கல்வி திட்டத்தின்படி மாணவ-மாணவிகள் படிக்கும்போது, தற்கொலைகள் நிகழாது. இதை செயல்படுத்த அறிவார்ந்த கூட்டத்தை தேடி பிடித்து இருக்கிறேன். வருகிற ஏப்ரல் 6-ந் தேதியை சரித்திரம் திரும்பும் நாளாக மாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

MASSMar 23, 2021 - 03:57:40 PM | Posted IP 162.1*****

SUPER SUPER BOSS

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir ProductsBlack Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory