» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: தமிழக அரசு

செவ்வாய் 23, மார்ச் 2021 11:28:05 AM (IST)

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கத்திற்கு பின் இந்தாண்டு தொடக்கத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கரோனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்குநோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து, கடந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தநிலையில், தற்போது அனைத்து வகையான கல்லூரிகளிலும் நேரடிவகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும், வாரத்தில் 6 நாள்களுக்கு ஆன்லைன்வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory