» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : நடிகர் மன்சூர் அலிகான் திடீர் முடிவு

திங்கள் 22, மார்ச் 2021 11:34:14 AM (IST)

மன வேதனையில் இருக்கிறேன். இந்தத் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை தேர்தலே வேண்டாம் என்று  நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்த நடிகர் மன்சூர் அலிகான், அதில் இருந்து வெளியேறி, தமிழ் தேசியப் புலிகள் கட்சி என்ற புதிய கட்சியைக் கடந்த மாதம் தொடங்கினார். அதைத் தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார்.

பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் மார்ச் 18-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது தேர்தலில் மிகப் பெரிய சவால் இருந்தாலும், துணிச்சலுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார். அதையடுத்து பூங்காக்கள், மீன் மார்க்கெட், கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று, தொடர்ச்சியாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் திடீரென நேற்று மாலை போட்டியிடப் போவதில்லை என்று மன்சூர் அலிகான் அறிவித்தார். இது தொடர்பாகக் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். மன வேதனையுடன் இருக்கிறேன்.

எங்கே சென்றாலும் பாய், எவ்வளவு பணம் வாங்கிவிட்டீர்கள்? என்று தொடர்ச்சியாகக் கேட்கிறார்கள். பாய் ஓட்டைப் பிரிப்பதற்காகத்தானே தேர்தலில் நிற்கிறீர்கள்? என்றும் கேட்கின்றனர். கெட்ட பெயருடன் நாம் இருக்கக் கூடாது. ஒன்றுமே புரியவில்லை. இந்தத் தேர்தலே நமக்கு வேண்டாம் என்று சென்னைக்குக் கிளம்பிவிட்டேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

kenapayaMar 22, 2021 - 02:33:19 PM | Posted IP 46.16*****

thuttu sir thuttu

kumarMar 22, 2021 - 01:12:33 PM | Posted IP 162.1*****

vanga vendiyathai vangiyachu...inema enna chennaiku kilambavendiyathuthan.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir ProductsBlack Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory