» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவகிரி வனப்பகுதியில் யானை தந்தங்களை கடத்திய 2 பேர் சிறையில் அடைப்பு

திங்கள் 22, மார்ச் 2021 11:12:00 AM (IST)சிவகிரி வனப்பகுதியில் யானை தந்தங்களை கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி, தேவிபட்டணம் வனப்பகுதிகளில் யானை தந்தங்களை கடத்துவதாக மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர்கள் சிவகிரி சுரேஷ், சங்கரன்கோவில் ஸ்டாலின், சிவகிரி வடக்குப்பிரிவு வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் ராஜீ, இம்மானுவேல், சுதாகர், பாரதிகண்ணன், திருவேட்டை, பெருமாள், அருண்மொழி பிரதீப், வனக்காவலர்கள், அருண்குமார், பாக்கியசாமி, கருணாகரன், செல்வராஜ், மணிகண்டன், வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், சரவணன், யோகநாதன் ஆகியோர் தனித்தனி குழுவாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்,

அப்போது வனப்பகுதிக்குள் இருந்து சிலர் தப்பியோடியதை வனத்துறையினர் கண்டு பிடித்துஅவர்களை விரட்டிச் சென்றனர். இதில் 2 நபர்கள் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவ்விருவரும், தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த மரியராஜ் மகன் கலைஞர் (43), திருநெல்வேலி ராஜகோபாலபுரத்தைச்சேர்ந்த சக்திதாஸ் மகன் செந்தூர் பாண்டியன் (28) என்றும் அவர்கள் யானை தந்தத்தை கடத்தும் கும்பலைச்சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கலைஞர் வீட்டில் இருந்த இரண்டு யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும் ஒரு மொபட், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பியோடியவர்கள் ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இருளப்பன் மகன் நடராஜன் (62), திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த ராஜேந்திரன், திருச்சியைச் சேர்ந்த ரூபன், மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி மற்றும் சிலர் என தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட கலைஞர், செந்தூர் பாண்டியன் ஆகிய இருவரையும் சிவகிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவ்விருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தப்பியோடியவர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory