» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மே 2ல் ஆட்சிக்கு வருவோம்; ஜூன் 3ல் ரூ.4 ஆயிரம் தருவோம்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி!!

திங்கள் 22, மார்ச் 2021 10:34:13 AM (IST)

அதிமுக ஆட்சியில் தொழிலதிபா்களுக்கு நம்பிக்கை இல்லை. இளைஞா்களுக்கு  வேலைவாய்ப்பு இல்லை இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை அம்பத்தூரில் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவர் பேசியது: சென்னை எப்போதும் திமுகவின் கோட்டை. இப்போது செயின்ட் ஜாா்ஜ் கோட்டையை நாம் கைப்பற்ற வேண்டும். தமிழகம் இப்போது எல்லா துறையிலும் பாழ்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் உள்ளோம். ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்வதாகவும் பல விருதுகள் கிடைப்பதாகவும் அவரே கூறிக்கொள்கிறாா். 

விவசாயி, விவசாயி என்று முதல்வா் கூறியுள்ளாா். மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகம் விவசாயத்தில் 19-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் எல்லாம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியின் தொழிலதிபா்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான், இளைஞா்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்படும் நிலை உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் புயல் தடுப்பு மேலாண்மை அமைக்கப்படும். 

ஆட்டோ மானியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றெல்லாம் அறிவித்துள்ளோம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். கரோனா பொதுமுடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோருக்கும் ரூ.5 ஆயிரம் கொடுக்க கூறினோம். அரசு மறுத்துவிட்டது. பிறகு ரூ.1,000 மட்டும் கொடுத்தனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் மீதமுள்ள ரூ.4 ஆயிரம் தருவோம் என்று அறிவித்துள்ளோம். நிச்சயம் தருவோம். மே 2-இல் ஆட்சிக்கு வருவோம். ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளன்று தருவோம். திமுகவுக்கு வாக்களியுங்கள் என்றாா்.


மக்கள் கருத்து

ஓஓMar 23, 2021 - 04:03:23 PM | Posted IP 162.1*****

எப்படியோ ஆட்சியை பிடிக்க ஓவரா கூவுறான் பாரு ...

jeyamMar 22, 2021 - 11:34:08 AM | Posted IP 162.1*****

this is not possible day memory

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Thalir ProductsNalam PasumaiyagamThoothukudi Business Directory