» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் நடத்தை விதிகள் மீறல்: ஸ்டாலின், உதயநிதி மீது அதிமுக புகார்

ஞாயிறு 21, மார்ச் 2021 12:45:49 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தபோது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார். 

அதேபோன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஆறுமுகசாமி ஆணையத்தை விமர்சித்தார்.  எனவே, இருவர் மீதும் தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam PasumaiyagamThalir Products

Black Forest Cakes
Thoothukudi Business Directory