» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் மர்ம நபர்கள் கைவரிசை!!

சனி 20, மார்ச் 2021 4:58:12 PM (IST)

நெல்லையில் வங்கி மேலாளர் வீட்டில் 40 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை பேட்டையை அடுத்த காந்திநகரை சேர்ந்தவர் சையத் இப்ராகிம் (62). ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இவரது மகன் மற்றும் மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் சையத் இப்ராகிம் தனது மனைவியுடன் காந்தி நகரில் வசித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கதவை பூட்டி விட்டு அவர் தூங்க சென்றார். வீட்டின் பின் பக்கமாக இருந்த கிரில் கேட்டை பூட்டாமல், மரத்தினாலான கதவை மட்டுமே பூட்டி உள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு, வீட்டின் பின்பக்க கதவை திறந்து மர்மநபர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இன்று காலை சையத் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அங்கு விரைந்து வந்த போலீசார் திறந்து கிடந்த பீரோவை ஆய்வு செய்தனர். மேலும் பின்பக்க கதவு வழியாக எவ்வாறு வந்தார்கள் என்றும் அவர்கள் ஆய்வு செய்தனர். திருட்டு போன தங்க நகையின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் ஆகும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் நேற்றிரவு கொள்ளையடிக்க திட்டமிட்டு காந்திநகருக்கு வந்துள்ளனர். அப்போது சையத் இப்ராகிமின் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றுள்ளனர்.

ஆனால் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த மர்மநபர்கள் சையத் இப்ராகிமின் வீட்டிற்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் கதவு மற்றும் பீரோ ஆகியவை உடைக்கப்படாமல், திறக்கப்பட்டு இருப்பதால் வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்களே யாரேனும் இதனை செய்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், வீட்டு பணிக்கு வேலைக்கு வருபவர்கள் அல்லது வேறு யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam
Thalir Products


Black Forest CakesThoothukudi Business Directory