» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அருகே 8 மாத குழந்தை வெட்டிக்கொலை : ஒருதலை காதல் தகராறில் வாலிபர் வெறிச்செயல்!

சனி 20, மார்ச் 2021 4:51:52 PM (IST)

நெல்லை அருகே 8 மாதக்குழந்தையை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியை அடுத்த மகிழடியை சேர்ந்தவர் ரசூல்ராஜ் (58). மதபோதகர். இவருக்கு எப்சி பாய் (52) என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இதில் முதலாவது மகள், அவரது கணவருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர்களது 8 மாத கைக் குழந்தையான குயின்சி தாத்தா ரசூல்ராஜின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். ரசூல்ராஜின் 4-வது மகள் கோவையில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவா என்ற சிவசங்கரன் (25) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது பெற்றோரிடம் சிவா பெண் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரசூல்ராஜ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த சிவா இன்று அதிகாலை அரிவாள், சுத்தியல், பெட்ரோல் கேனுடன் ரசூல்ராஜின் வீட்டிற்கு சென்றார். அங்கு எப்சிபாய் மற்றும் அவர்களது பேத்தி குயின்சி ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். உடனே சிவா அரிவாளால் 2 பேரையும் சரமாரி வெட்டி உள்ளார். 

அவர்களது அலறல் சத்தம் கேட்டு நடைபயிற்சிக்கு சென்ற ரசூல்ராஜ் வீட்டிற்கு ஓடி வந்தார். அப்போது அவரையும் அரிவாளால் சிவா சரமாரி வெட்டினார். பின்னர் 3 பேரையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனால் சிவா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கைக்குழந்தை குயின்சி பரிதாபமாக இறந்தாள். ரசூல்ராஜ், எப்சிபாய் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் ஒருதலைக்காதலால் சிவா, குழந்தை உள்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து

திரு டான்Mar 20, 2021 - 11:38:42 PM | Posted IP 173.2*****

காம பிராந்து. இந்த பொண்ணு இல்லனா வேற பொண்ணுன்னு போய்கிட்டே இருக்கணும். அதான் ஆம்பிளைக்கு அழகு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory