» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜெயலலிதா மரணத்துக்கு திமுகதான் காரணம்: துணை முதல்வர் ஓபிஎஸ் பிரச்சாரம்

சனி 20, மார்ச் 2021 3:22:17 PM (IST)

ஜெயலலிதா மரணத்துக்கு திமுகதான் காரணம் என்று சென்னையில் பிரசாரத்தின்போது துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார். 

சென்னை ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, திமுக ஆட்சிக் காலத்தில் சமூக நீதிப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? பல்வேறு தருணங்களில் ஸ்டாலினை முதல்வர் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவரால் எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.

ஜெயலலிதா இந்த நிலைமைக்கு ஆளானதற்குக் காரணமே திமுகதான். திமுகவினர் அடுத்தடுத்துத் தொடுத்த வழக்குகளால்தான் ஜெயலலிதா மன உளைச்சல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். முடிந்த வழக்குகளை, தீர்ப்பு வந்த வழக்கை மீண்டும் மீண்டும் நீதிமன்றம் எடுத்துச் சென்று, அந்த வழக்கை ஜெயலலிதாவுக்கு எதிராகப் புதுப்பிப்பார்கள். யார் யாருக்கு என்னென்ன கெடுதல் வேலைகளைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும்தான் திமுகவினர் செய்வார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Thalir ProductsThoothukudi Business Directory