» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா: மின்னிதழ் - 3 புதிய நூல்கள் வெளியீடு!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 5:16:28 PM (IST)

தூத்துக்குடி ரோச் மண்டபத்தில் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, 'நெய்தல்' மின்னிதழ் வெளியீடு மற்றும் 3 புதிய நூல்கள் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் தலைமை தாங்கினார். புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. ஆசியுரை வழங்கினார். புன்னைக்காயல் ஊர்க் கமிட்டி தலைவர் கிறிஸ்டன், துறைமுகக் கமிட்டி தலைவர் தாமஸ், மனோன் அக்வா உரிமையாளர் டெனிஸ்டன் மற்றும் ஜானி மோத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொற்கை டி.வி. இயக்குநர் மைக்கேள் பயஸ் கோஸ்தா புதிய மின்னிதழை அறிமுகம் செய்து உரையாற்றினார். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு அரிசியைச் சங்கத்தின் செயலாளர் ஆண்டனி அம்புரோஸ் கரிகாலன் வழங்கினார். மாணவர்களுக்கான சீருடைகளை எழுத்தாளர் வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸ் வழங்கினார். மேலும், நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் உயர்கல்வி பயிலும் 10 மாணவர்களுக்குத் தலா ₹5,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
ஜோமெல் எழுதிய சிட்டுக்குருவி கவிதை நூலைத் தொழிலதிபர் லினோ வெளியிட மணவை வினோஜின் பெற்றுக் கொண்டார். இந்நூலைப் பேராசிரியர் முனைவர் ஜாக்சன் அறிமுகம் செய்தார். ஆசிரியர் நிலன் கனகராஜ் எழுதிய அழகிற்குக் காப்புரிமை கவிதை நூலை தொழிலதிபர் மெரிண்டோ வில்லவராயர் வெளியிட, ராஜா போஸ் ரீகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ள ஆசிரியை லூடா நூலை அறிமுகம் செய்து பேசினார்.
ஆசிரியரும் எழுத்தாளருமான தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ எழுதிய நெய்தல் அண்டோவின் உரைகள் எனும் நூலை அவரது மாணவரும் எலும்புமுறிவு மருத்துவருமான பிரபு அலாய் வெளியிட, மற்றொரு மாணவரும் விரிவுரையாளருமான அண்டோ ஜோபர்ட் பெற்றுக் கொண்டார். இந்நூலை ஆசிரியரின் இந்நாள் மாணவர் சூர்யா சிறப்பான முறையில் அறிமுகம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் புன்னைக்காயல் ஊர் நிர்வாகிகள், பரதவ அரசியல் எழுச்சிப் போராளிகள் அமைப்பைச் சேர்ந்த பெஸ்டி, கனிட், ரகேஷ், கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் பிரின்ஸ்டன் பர்னாண்டோ, இரத்த தான ஜெயபால், தியாகி பெஞ்சமின் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த பிரேசில், தமிழக நெய்தல் தொழில் முனைவோர் சங்கத்தின் பிரின்ஸ் உள்ளிட்ட பல அமைப்பினரும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிஷாந்த் வரவேற்புரையாற்றினார். அன்னை பரதர் நலச்சங்கப் பொருளாளர் காஸ்ட்ரோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிறைவாக ஆசிரியர் நெய்தல் அண்டோ நன்றியுரை கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









