» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கண்மாய்கள், குளங்களை தூர்வார முடிவு : பசுமை-தூய்மை இயக்க நிர்வாகக் குழு தீர்மானம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 3:55:58 PM (IST)

கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கண்மாய்கள், குளங்களை அரசின் அனுமதி பெற்று தூர்வாரிப் பராமரிப்பது என்று பசுமை-தூய்மை இயக்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கோவில்பட்டி பசுமை-தூய்மை இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அமைப்பின் தலைவர் ரவிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவில்பட்டி நகரின் உட்கட்டமைப்பு, தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்துவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு, பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:
கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் அடிக்கடி ஏற்படும் வீதி விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத்துறையிடம் உரிய அனுமதி பெற்று, சாலையின் இரு பக்கங்களிலும் தடுப்பு அரண்களும் (Barricades), சாலையின் நடுவில் தடுப்புச்சுவரும் (Divider) பசுமை-தூய்மை இயக்கத்தின் சார்பில் அமைத்துத் தருவது என முடிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி நகரத்தைப் பசுமையாகவும் தூய்மையாகவும் மாற்ற நகராட்சி மற்றும் அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது; இதன் முன்னோட்டமாக, இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று அருள்மிகு பூவனநாதசுவாமி - செண்பகவள்ளி அம்மன் திருக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பசுமையாகவும் தூய்மையாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
வருங்காலத்தில் கோவில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கண்மாய்கள், குளங்களை அரசின் அனுமதி பெற்று தூர்வாரிப் பராமரிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான பொறியாளர் ராகவன், மருத்துவர் சேதுராமன், தொழிலதிபர் MSSV பாபு, எழுத்தாளர் சுரேஷ்குமார், திண்டுக்கல் "வாஷ்" (WASH) இன்ஸ்டிடியூட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு க. தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)

தி பார்க் கிண்டர்கார்டனில் 80-வது சுதந்திர தின விழா!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:44:39 PM (IST)









