» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி!
புதன் 5, ஆகஸ்ட் 2026 11:37:18 AM (IST)
தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் உறங்கிய நிலையிலேயே இறந்தார்.
தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா என்பதால் நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்ததாக தெரிகிறது. இரவு வீட்டுக்கு வந்து படுத்து உறங்கியவர் காலையில் இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தென்பாதம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









