» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மரத்தடி விழுந்ததில் தொழிலாளி பரிதாப சாவு

புதன் 5, ஆகஸ்ட் 2026 11:29:40 AM (IST)

தூத்துக்குடியில் மரத்தடிகளை லாரியில் ஏற்றும் போது சரிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் ஆறாவது தெருவில் வசிப்பவர்  தங்கமுத்து. இவரது மகன் சுந்தரபாண்டி (57). இவர், தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கண்டெய்னர் நிறுவனத்தில் காண்ட்ராக்ட் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் மரக்கட்டைகளை மொத்தமாக பெல்ட் மூலம் கட்டி லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென மரக்கட்டைகள் சரிந்து விழுந்ததில் மரக்கட்டைக்குள் சிக்கிமயக்கம் அடைந்தார். 

உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory