» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேம்பாலத்தில் சாய்ந்த சோலார் மின் கம்பம்: போக்குவரத்து சீர்செய்த பக்தருக்குப் பாராட்டு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 11:23:29 AM (IST)

தூத்துக்குடியில், சூறாவளி காற்று காரணமாக மேம்பாலத்தில் உயர் சோலார் மின் கோபுர விளக்கு கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. அவ்வழியாக வந்த செவ்வாடைத் தொண்டர் ஒருவர், சாய்ந்து கிடந்த கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீன்வளக் கல்லூரி எதிரே உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் சோலார் மின்விளக்குக் கோபுரக் கம்பம், திடீரென வீசிய சூறாவளி காற்றினால் முறிந்து கீழே சாய்ந்தது.மின் கோபுர விளக்கு கம்பம் அற்று கீழே விழுந்தபோது, நல்வாய்ப்பாக அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழாமல் தனியாக விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், மின் கம்பம் நடுரோட்டில் விழுந்து கிடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்தது. அந்தச் சமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த 'செவ்வாடைத் தொண்டர்' சக்தி என். பாண்டி என்பவர், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாகச் செயல்பட்டார்.
சாய்ந்து கிடந்த சோலார் மின் கோபுர விளக்கைச் சிரமப்பட்டுத் தூக்கி, மேம்பாலத்தின் ஓரத்திற்கு எடுத்து வைத்தார். இதனால் தடைபட்டுக் கிடந்த போக்குவரத்து உடனடியாகச் சீரடைந்து வாகனங்கள் தடங்கலின்றிச் செல்லத் தொடங்கின.

ஆபத்தான சூழலில் துரிதமாகச் செயல்பட்டுப் போக்குவரத்தைச் சீரமைத்த சக்தி என். பாண்டியின் இந்தச் சேவையைப் பாராட்டி, அப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
P KamarajAug 3, 2026 - 08:11:50 PM | Posted IP 172.7*****
ஆபத்தை உணராமல் துரிதமாக செயல்பட்டு உதவி செய்த அந்த நண்பருக்கு என் நன்றி வாழ்த்துக்கள்
MANITHANAug 3, 2026 - 12:30:39 PM | Posted IP 172.7*****
SUPER BRO
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)










சங்கரன்Aug 4, 2026 - 07:26:01 AM | Posted IP 172.7*****