» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளிக்குச் செல்லுமாறு தாய் கூறியதால் பிளஸ் 2 மாணவி விபரீத முடிவு!
வியாழன் 9, ஜூலை 2026 11:18:55 AM (IST)
கயத்தாறு அருகே பள்ளிக்குச் செல்லுமாறு தாய் அறிவுறுத்தியதால் 12-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் கிராமம் காலனித் தெருவில் வசிப்பவர் ராஜ்குமார், விவசாயி மற்றும் தினக்கூலி தொழிலாளி. இவரது மகள் வர்ஷா (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக வர்ஷா பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இதனால் வர்ஷாவின் தாயார், மகளிடம் பள்ளிக்குச் செல்லுமாறு அறிவுரை கூறிவிட்டு காட்டு வேலைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வர்ஷா அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தாயார் கதவைத் திறந்து பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








