» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் : காவல் ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார்!

வியாழன் 9, ஜூலை 2026 10:54:34 AM (IST)

corpoSchooNOrthInsp.jpg

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியருக்குக் கல்வி உபகரணங்களை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார். 

தூத்துக்குடி மேலூர் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 40 மாணவ மாணவியருக்கு, இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிப் பைகள் மற்றும் தண்ணீர் புட்டிகளை வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் முன்னின்று வழங்கினார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆய்வாளர் வேல்ராஜ் மாணவர்களின் வகுப்பறைக்கே நேரடியாகச் சென்று பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், மாணவ மாணவியர்களின்  பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சம்பந்தமாகவும் விழிப்புணர்வுச் சிற்றுரை வழங்கிக் கலந்துரையாடினார். 

இந்த சந்திப்பில் ஆய்வாளரின் கேள்விக்கு பயமின்றி மாணவ மாணவியர்கள் தைரியமாக  பதில் அளித்தது சுவாரஸ்யமாக அமைந்தது. இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி மைக்கேல், ஆசிரியர்கள் மற்றும் இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளை நிர்வாகி யோவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory