» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நகரில் நாளை இலவசப் பொது மருத்துவ முகாம்: ரோட்டரி கிளப், அரிமா சங்கம் ஏற்பாடு!!

வியாழன் 9, ஜூலை 2026 10:18:24 AM (IST)

தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நாளை இலவசப் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமை ஸ்பிக் குழுமங்களின் தலைவர் அஸ்வின் முத்தையா தொடங்கி வைக்கிறார். 

தூத்துக்குடி ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம், ஸ்பிக்நகர் அரிமா சங்கம், சென்னை ஏஎம் ஃபவுன்டேஷன், திருநெல்வேலி காவேரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இலவசப் பொது மருத்துவ முகாம் நாளை (ஜூலை 10, வெள்ளிக்கிழமை) ஸ்பிக் நகர் ஸ்பிக் மெடிக்கல் சென்டர் வளாகத்தில் காலை 11:30 மணி முதல் மதியம் 4:00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. 

ஸ்பிக் குழுமங்களின் தலைவர் அஸ்வின் முத்தையா முகாமைத் தொடங்கி வைக்கிறார். இந்த முகாமில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு பரிசோதனைகள், இதயப் பரிசோதனைகளான ஈசிஜி (ECG), எக்கோ (ECHO), நுரையீரல் செயல்பாடு குறித்த பரிசோதனை, கண் சம்பந்தப்பட்ட நவீனப் பரிசோதனைகள், உடல் சார்ந்த அனைத்துப் பொதுவான நோய்களுக்கான சிறப்புப் பரிசோதனைகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.

இம்முகாமில், ஆண், பெண் இருபாலருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்துகளும் தேவையான ஆலோசனைகளும், இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிக்நகர் ரோட்டரி கிளப், அரிமா கிளப், ரோட்ராக்ட் கிளப், லியோ கிளப் ஆகிய அமைப்புகள் இணைந்து செய்துள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory