» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்: தலைவர், செயலாளர் தேர்வு - வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!
வியாழன் 9, ஜூலை 2026 8:50:46 AM (IST)
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர், மகளிர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து, தகுதி பெற்ற வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தலைவர், செயலாளர், மகளிர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் எஸ்.பி. ராமச்சந்திரன், ஜே. ராஜேந்திரன், பி. பிள்ளை விநாயகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு எஸ்.பி. வாரியர், செயலாளர் பதவிக்கு எஸ்.எஸ்.பி. அசோக் ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பித்த எம். ஜஸ்டினா, ஏ. செல்வலட்சுமி, என். உஜியானா ஆகிய மூன்றும் போட்டியின்றி ஏற்கப்பட்டுள்ளன.
துணைத்தலைவர் பதவிக்கு ஜி. ஜஸ்டின், எஸ். ராஜா ஆகிய இருவரிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இணைச்செயலாளர் பதவிக்கு எம். ஆரோக்கியமேரி, எஸ். இப்ராஹிம் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு என். இளவளவன், கே. நான்சி சோபனா ஜெனிபர் ஆகியோரும் களம் காண்கின்றனர்.
ஆண்கள் செயற்குழு உறுப்பினர்கள் பிரிவில் உள்ள இடங்களுக்கு எம். சின்னமுத்து, எம். ஐயப்பன், கே. முனிஸ்குமார், எம். முருகன், எம். முத்து தினேஷ், ஈ.சி. ராஜகுமார் ஆபிரகாம், ராஜ்குமார், எம். சபரிநாதன் ஆகிய 8 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள் 10.07.2026 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை தங்களது மனுக்களைத் திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








