» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீவிபத்து : ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பல்!
வியாழன் 9, ஜூலை 2026 8:44:01 AM (IST)
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பலானது.
தூத்துக்குடி துறைமுகச் சாலையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில், நிலக்கரி குவியலில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீரெனத் தீப்பிடித்தது.
அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாகத் தீ மளமளவெனப் பரவியது.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அனல் மின் நிலையப் பொறியாளர்களும், பணியாளர்களும் இணைந்து, அருகிலிருந்த பிற நிலக்கரி குவியல்களுக்கும், மின் உற்பத்தி அமைப்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்கத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், இத்தொழில்நுட்ப விபத்தில் சுமார 3 கோடி மதிப்பிலான நிலக்கரி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தால் மின் உற்பத்தியில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என அனல் மின் நிலைய நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்துத் தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








