» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பயங்கர தீ விபத்து: 5 வீடுகள் எரிந்து சேதம்!

வியாழன் 9, ஜூலை 2026 8:29:45 AM (IST)

tutyFirei43i.jpg

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருகே திருவள்ளூர்புரம் பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து முழுமையாகச் சேதமடைந்தன.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் அஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் மேற்கூறை அமைக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில், இதன் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் உள்ள குப்பைகளுக்குச் சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாகத் தீ கட்டுக்கடங்காமல் பரவி, அருகே இருந்த குடியிருப்பு வீடுகளில் பற்றியது.

இத்தீ விபத்தில் கருப்பசாமி, ஆறுமுககனி, மேரி, ராமலட்சுமி, மடோனா ஆகிய 5 பேரின் வீடுகள் முற்றிலும் தீப்பற்றி எரிந்தன. வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும், விபத்தின் தீவிரத்தால் ஒரு வீட்டில் இருந்த எரிவாயு உருளைபயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் 4 வாகனங்களில் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித்தீயை அணைத்தனர். இக்கோர விபத்து குறித்துத் தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குப்பைக்குத் தீ வைத்த நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory