» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசுப் பள்ளி மாணவியிடம் மனிதாபிமானமின்றி நடப்பதா? தவெக அமைச்சருக்கு கீதாஜீவன் கண்டனம்!
வியாழன் 9, ஜூலை 2026 8:06:45 AM (IST)
ரீல்ஸ் எடுப்பதற்காக அரசுப் பள்ளி மாணவியிடம் மனிதாபிமானமின்றி அமைச்சர் கீர்த்தனா நடந்து கொண்டதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளி ஒன்றில் அண்மையில் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம் போட்டு மாண்பைச் சீர்குலைத்த நிலையில், அரசுப் பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறி, தவெக அரசின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளி மாணவியிடம் அராஜக போக்குடன் கேள்வி கேட்டு ஆசிரியர்களையும் அதட்டும் தொனியில் நடந்து கொண்டது மனிதாபிமானம் அற்ற செயல். ஓர் அரசுப் பள்ளிக்கு அமைச்சரோ, ஆட்சியரோ வருகிறார்கள் என்றால் இயல்பாகவே பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அச்சம் தொற்றிக் கொள்ளும்அத்தகைய சூழலில் அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான கும்பல், ரீல்ஸ் எடுப்பதற்காகப் பள்ளிக் குழந்தையிடம் தடபுடலான கேள்வியைக் கேட்டால் எந்தக் குழந்தைக்குத் தான் பதற்றம் வராது. அதுமட்டுமின்றி கடைசி பெஞ்ச் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் என்ற பிற்போக்குத்தனமான சினிமா வசனங்களைப் பேசி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளார்.
குழந்தைகளின் புகைப்படத்தைப் பொதுத் தளத்தில் வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்பது அமைச்சருக்குத் தெரியாதா? எந்தக் குழந்தைகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்களோ, அந்தக் பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைக்கும் செயலில் தவெக அரசு இறங்கியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று சாடியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








