» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொது இடங்களில் பேனர்கள் வைக்கத் தடை: தவெக மாவட்டச் செயலாளர் பிரைட்டர் அறிக்கை!

புதன் 8, ஜூலை 2026 8:23:43 PM (IST)

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடங்களில் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் வைக்கக் கூடாது என்றும், இதை மீறும் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.வி.ஏ. பிரைட்டர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆணையின்படியும், கழகப் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் கடந்த 20.06.2026 அன்று கொடுத்த அறிவுறுத்தலின்படியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலோ, மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையிலோ, தனிநபர்களின் நிகழ்ச்சிகளை முன்னிறுத்தியோ, சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்களில் முன் அனுமதி பெறாமல் பொது இடங்களில் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் (Hoardings) வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே சாலைகள், பொதுப்பாதைகள், கல்வி நிறுவன வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள் அல்லது பொதுமக்களின் போக்குவரத்திற்கும் இயல்பான அன்றாட நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் எந்த இடங்களிலும் பேனர்கள், ஹோார்டிங்ஸ், வரவேற்பு வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள் எதுவும் வைக்கப்படாததைக் கழகப் பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படுத்தும் செயல்கள், கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் கல்விச் சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகள், மருத்துவமனைகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது எந்த வகையான பொதுத் தொந்தரவுகளையும் உருவாக்குவது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இனிமேலும் தொடர்ந்து இதுபோன்று பேனர்கள், ஹோார்டிங்ஸ், வரவேற்பு வளைவுகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதாகத் தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வரும்பட்சத்தில், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகக் கண்டறியப்படும் நிர்வாகிகள் மற்றும் கட்சியினருக்கு எதிராகத் தலைமைக்குப் பரிந்துரைக்கப்பட்டு கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.வி.ஏ. பிரைட்டர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory