» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லை - திருச்செந்தூர் இரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து!
புதன் 8, ஜூலை 2026 5:37:25 PM (IST)

மதுரை கோட்டத்தில் நடைபெறவுள்ள இரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாகத் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இரு இரயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜூலை 15, 18, 21, 24, 27, 31 ஆகிய 6 நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4:25 மணிக்குத் திருநெல்வேலி செல்லும் பயணிகள் இரயில் (வண்டி எண்: 56754) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, ஜூலை 15, 18, 21, 24, 27, 31 ஆகிய 6 நாட்கள் பாலக்காடு - திருச்செந்தூர் இரயில் (வண்டி எண்: 16731) மணியாச்சி - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் பாலக்காட்டில் இருந்து மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
பாலக்காடு சென்றடையும் நேரத்தில் மாற்றம்:
மறு மார்க்கத்தில், ஜூலை 18, 21, 24, 27, 30, 31 ஆகிய 6 நாட்கள் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் இரயில் (வண்டி எண்: 16732) திருச்செந்தூரில் இருந்து நண்பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, 50 நிமிடங்கள் தாமதமாக பாலக்காடு சென்றடையும் எனத் தென்னக இரயில்வே மதுரை மண்டலம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








