» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் குடும்பத் தகராறு: வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 8, ஜூலை 2026 11:04:53 AM (IST)
எட்டையபுரம் அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (38). கட்டிடத் தொழிலாளி. தற்போது தாப்பாத்தி முகாமில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், வசந்தகுமார் தனது மனைவி பரமேஸ்வரி மற்றும் குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதமாக எட்டையபுரம் கோட்டை மேல தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வசந்தகுமாருக்கு மதுப் பழக்கம் இருந்ததால், போதையில் மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பரமேஸ்வரி வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். மதியம் 3 மணியளவில் பரமேஸ்வரி வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே வசந்தகுமார் அஸ்பெஸ்டாஸ் கூரை கம்பியில் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வசந்தகுமார் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார், வசந்தகுமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








