» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டின் கதவை உடைத்து ரூ.50,000 பணம் வெள்ளி கொலுசுகள் திருட்டு!

புதன் 8, ஜூலை 2026 10:59:33 AM (IST)

கடலையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.50,000 ரொக்கப் பணம் மற்றும் வெள்ளி கொலுசுகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் அருகே உள்ள கடலையூர், முதலியார் தெருவைச் சேர்ந்தவர் வெயில்முத்து. இவருடைய மனைவி சத்யா (55). இவர் நேற்று காலை சுமார் 9:00 மணியளவில் எட்டையாபுரத்தில் வசிக்கும் தனது மகள் சசிகலாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று (ஜூலை 8) காலையில் சத்யா தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் அறையிலிருந்த பீரோவின் கதவும் திறக்கப்பட்டிருந்தது.

பீரோவைச் சோதித்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த ₹50,000 ரொக்கப் பணம் மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. சத்யா ஊரில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory