» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் : கட்டிடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது!
புதன் 8, ஜூலை 2026 8:25:46 AM (IST)
தூத்துக்குடியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கட்டிடத் தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி, தாளமுத்துநகர் வண்ணார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் குருசாமி (38). கட்டிடத் தொழிலாளியான குருசாமி, தாளமுத்துநகர் பகுதியில் உள்ள 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
போக்ஸோ சட்டத்தில் கைது:
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலியல் அத்துமீறல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குருசாமியைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை அதிரடியாகக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








