» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை: போக்சோ சட்டத்தில் சமையல்காரர் கைது!
புதன் 8, ஜூலை 2026 7:56:39 AM (IST)
கல்லூரி மாணவியைக் காதலிக்க வற்புறுத்தித் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சமையல்காரரை, 'சிங்கப்பெண் அதிரடிப்படை' போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (31). சமையல் வேலை செய்து வரும் இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுத் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சொக்கலிங்கம் தனது பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அம்மாணவியிடம் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, இதுகுறித்து 'சிங்கப்பெண் அதிரடிப்படை'யின் கட்டணமில்லா உதவி எண்களான 1091-க்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து, செக்காரக்குடி கிராமத்திற்கு விரைந்த சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ஆரோக்கிய ஜென்சி தலைமையிலான போலீஸார், சொக்கலிங்கத்தைக் கைது செய்தனர். பின்னர் அவர், தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சொக்கலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








