» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்தக் கோரிக்கை : பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை!
திங்கள் 6, ஜூலை 2026 3:53:10 PM (IST)

மேல்மாந்தையில் உள்ள கல்லூரி முன்பு பேருந்துகள் நிற்காமல் செல்வதால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், அங்குப் பேருந்து நிறுத்தத்தை முறைப்படுத்தக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை ஈசிஆர் சாலையில் ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் சமுதாயக் கல்லூரி கடந்த 18 ஆண்டு காலமாகச் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் தற்போது 223 மாணவிகள் படித்து வருகின்றனர்; 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிக்கு வரும் மாணவிகளும் ஆசிரியர்களும் பேருந்துகளைப் பயன்படுத்தும்போது, பேருந்துகள் கல்லூரிக்கு முன்பு நிற்காமல், ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்மாந்தை நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.
இதனால், இங்கிருந்து கல்லூரிக்குச் செல்ல வேண்டிய மாணவிகளும் ஆசிரியர்களும் தினமும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு மிகவும் சிரமப்படுகின்றனர். இக்கல்லூரிக்காக 11 ஆண்டுகளுக்கு முன்பே பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்தக் கோரி இதற்கு முன் 4 முறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், அதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி - இராமநாதபுரம் மற்றும் இராமநாதபுரம் - தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக மேல்மாந்தை சமுதாயக் கல்லூரி முன்பு நின்று செல்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என இக்கல்லூரி இயக்குநர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒரு புதிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)








